← முகப்பு செய்திகள்

விஜய் உடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது?

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
விஜய் உடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது?

பட மூலாதாரம், @TVKPartyHQ/X

தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

வரும் மே 10ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை காலாவதியாவதால், அதற்குள் பெரும்பான்மையை பெற வேண்டும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில கட்சிகள் தவெக உடன் கூட்டணி ஆட்சியில் பங்கேற்கத் தயாராக இருப்பதால், விஜய் பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளது என பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அக்கட்சிகள் அதை உறுதிப்படுத்தவில்லை.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாதபட்சத்தில், முதல்வராக விஜய் பொறுப்பேற்று, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற வாய்ப்பும் இருப்பதாக சட்டநிபுணர்கள் கூறுகின்றனர்.

விஜய்

பட மூலாதாரம், @TVKPartyHQ/X

ஆட்சி அமைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?

வரும் மே 10-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகச் சொல்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தவெக வழக்கறிஞர் அணியிலும் நிர்வாகியாக இருக்கிறார்.

பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய கிருஷ்ணமூர்த்தி, ''தமிழக சட்டப்பேரவை, வரும் மே 10 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. அதற்குள் புதிய ஆட்சியை அமைத்தாக வேண்டும். அதற்கு பெரும்பான்மைக்கு தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் தவெக வழங்கவேண்டும்.'' என்கிறார்

பெரும்பான்மையை பெற மிகக்குறுகிய காலமே இருப்பதால் மற்றொரு வாய்ப்பை தவெக பயன்படுத்தலாம் என்று கூறிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மே 10 ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக விஜய் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டு, 15 நாட்கள் அவகாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என்றார்.

சட்டப்பேரவை

பட மூலாதாரம், @TVKPartyHQ/X

ஆதரவு கிடைக்குமா?

ஆனால் இதற்கெல்லாம் எந்தத் தேவையும் இல்லாமல், பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

திமுக கூட்டணியில் உதயசூரியன் அல்லாத சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் – 5, விசிக–2, கம்யூனிஸ்ட் கட்சிகள்–4, தேமுதிக–1 என 12 எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு கிடைப்பதில் தடை இருப்பதாக தான் கருதவில்லை என அவர் கூறுகிறார்.

அதே சமயம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர பாமக, அமமுக போன்ற கட்சிகளும் விஜய் உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.

திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் விஜய் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறார் சிவப்பிரியன்.

பத்திரிக்கையாளர் குபேந்திரன்

''விஜய் ஏற்கெனவே கூட்டணி ஆட்சி என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. '' என்றார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

மேலும் தொடர்ந்த அவர், ''பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நிலைக்கு முன்பாகவே, முறைப்படி ஆதரவுக் கடிதம் கொடுத்து, விஜய் ஆட்சி அமைத்துவிடுவார். இது அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாகவும் இருக்கலாம்.'' என்றார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வென்ற போதிலும் அந்த கட்சி திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று அறிவித்துள்ளது.

கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து ராகுல் முடிவெடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், ''நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். விஜயிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதுபோல எந்தவிதமான திட்டமும் எங்களுக்கு இல்லை.'' என்றார்.

இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் தெரிவித்துள்ளனர். இவர்கள் மற்றும் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ் ஆகியோர் இன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் திமுக அலுவலகத்திற்கு வரவில்லை.

''நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம். விஜயை நான் என்றுமே 'எங்கள் வீட்டு பையன்' என சொல்லி இருக்கிறேன். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்'' என விருத்தாசலத்தில் வெற்றி பெற்ற தேமுதிகவைச் சேர்ந்த பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
French Open 2026: Poland's Maja Chwalinska became the first qualifier in French
05 Jun 2026
செய்திகள்
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?
52 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏ
53 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
8 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
French Open 2026: Poland's Maja Chwalinska became the first
2
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒர
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 05 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்
செய்திகள் · 52 நிமிடங்கள் முன்னர்
5
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்தி
செய்திகள் · 53 நிமிடங்கள் முன்னர்
6
தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு டெண்டர் முறைகேட
தலையங்கம் · 54 நிமிடங்கள் முன்னர்
7
லிங்க்ட்இன் (LinkedIn), இன்டீட் (Indeed) மற்றும் அப்வொர்க் (Upwor
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net