← முகப்பு செய்திகள்

வாளில் கேக் வெட்டிய எம்எல்ஏ, பெண்ணுக்கு பாலியல்: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அட்ராசிட்டி ஆரம்பித்த தவெக

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 12 பார்வைகள்
வாளில் கேக் வெட்டிய எம்எல்ஏ, பெண்ணுக்கு பாலியல்: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அட்ராசிட்டி ஆரம்பித்த தவெக
ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அட்ராசிட்டி ஆரம்பித்த தவெக

10 சிறுமிக்கு பாலியல் சீண்டல்

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள 10 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார். ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற பாம்பு தினேஷ் என்பவர் தனது வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த 3 ஆம் தேதி ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர் தவெக பிரமுகர் என்று கூறப்படுகிறது.

வாளில் கேக் வெட்டிய எம்எல்ஏ

வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சென்னை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவின் பிறந்த நாளை அந்த கட்சியினர் சூரிய நாராயணன் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்பொழுது தனது பிறந்தநாளில் பிளாஸ்டிக் மற்றும் மரத்தினால் ஆன கத்தியை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவிடம் அவரது ஆதரவாளர் வழங்கினர். ஆனால் அதை வைத்துவிட்டு வீரவாளை எடுத்து கையை உயர்த்தி காட்டி அதை வைத்து கேக் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரில் அட்ராசிட்டி

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்த காரில் அட்ராசிட்டியில் தவெகவினர் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டும் மழையில் தவெக கொடி பிடித்து கொண்டு கோஷம் போட்டு ஸ்டாண்ட் செய்து அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதே போன்று தவெக வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் சாலை ஒரத்தில் ஆடு பலியிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தவெக துண்டு அணிந்த அவர்கள் ஆடு பலியிடுவதும், பின்னர் ஆட்டின் தலை, உடலை சாலையின் ஒரமாக எடுத்து போடுவது, அதனை பார்த்து மக்கள் அச்சப்படுவது போன்ற வீடியோ இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
French Open 2026: Poland's Maja Chwalinska became the first qualifier in French
05 Jun 2026
செய்திகள்
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏ
53 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
8 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
French Open 2026: Poland's Maja Chwalinska became the first
2
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒர
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 05 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்
செய்திகள் · 51 நிமிடங்கள் முன்னர்
5
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்தி
செய்திகள் · 53 நிமிடங்கள் முன்னர்
6
தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு டெண்டர் முறைகேட
தலையங்கம் · 54 நிமிடங்கள் முன்னர்
7
லிங்க்ட்இன் (LinkedIn), இன்டீட் (Indeed) மற்றும் அப்வொர்க் (Upwor
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net