← முகப்பு செய்திகள்

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியபொல – கும்புக்கெடே வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற வீதிவிப

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியபொல – கும்புக்கெடே வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற வீதிவிப
வாரியபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் பலி!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியபொல – கும்புக்கெடே வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கும்புக்கெடே நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 85 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net