← முகப்பு தமிழ்

வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லொறி ஒன்று செயலிழந்ததால், பாதிப்படைந்த மக்கள், தாகம் காரணமாக

🕐 2 நிமிடங்கள் முன்னர் 📂 தமிழ் 6 பார்வைகள்

பாதிக்கப்பட்ட அனைவரும் நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மாலி நாட்டில் நடந்த ஒரு மத விழாவில் பங்கேற்றுவிட்டு அவர்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாக நைஜரின் அகாடெஸ் பிராந்திய ஆளுநர் அலுவலகம் வியாழக்கிழமை (04) இரவு இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

மாலி மற்றும் அல்ஜீரியா எல்லைகளுக்கு அருகிலுள்ள அசமகா (Assamaka) என்ற இடத்திற்கு மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அந்த லொறி செயலிழந்து நின்றுள்ளது.

அங்கிருந்த இரண்டு ஆண்கள், ஒரு நீர்நிலையை நோக்கி 50 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்து சென்று உயிர் பிழைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அசமகா பகுதிக்குத் தொடர்ந்து சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

அகாடெஸ் பிராந்திய ஆளுநர் ஜெனரல் இப்ரா பௌலாமா இசா (Gen. Ibra Boulama Issa) என்பவரால் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு, அந்த லொறி நைஜர் எல்லையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலியின் தல்ஹான்டெக் (Talhandek) நகரத்திலிருந்து பல நாட்களாகப் பயணித்து வந்ததை அறிந்துகொண்டது.

குறித்த லொறி செயழிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
06 Jun 2026
📰
தமிழ்
மீகொடை சந்தியில் தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்
06 Jun 2026
📰
தமிழ்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அ
06 Jun 2026
📰
தமிழ்
விசேட தேவையுடையோர்கள் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் (CRPD) உறுப்பு நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அமர்வில் இலங்கை
06 Jun 2026
📰
தமிழ்
டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவை
06 Jun 2026
📰
தமிழ்
அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச்
06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net