← முகப்பு பதிவு

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 20 பார்வைகள்
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்
தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் தீவிரமான அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்

'காணிகளை விடுவிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, முப்படைகளின் தளபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நேரடியாகக் களப்பயணம் மேற்கொண்டோம்.

இதன்போது பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கோரும் குறிப்பிட்ட சில காணிகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவங்கள் குறித்து நேரில் ஆராயப்பட்டது.

இந்தத் தகவல்கள் மற்றும் கள ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஜனாதிபதி தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையிலும், நாடாளுமன்றப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும்.

தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும், சில அதிமுக்கியமான பகுதிகளில் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

சில குறிப்பிட்ட காணிகளை விடுவிப்பதானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.

எனவே, அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், துறைசார் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளை உள்ளடக்கிய விசேட உயர்மட்டக் கூட்டமொன்று மிக விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
7 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net