← முகப்பு பதிவு

வங்காளதேசத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனித்துவமான சிகை அலங்காரத்தை வியக்கத்தக்க வகையில் ஒத்த

🕐 5 நாள்கள் முன்னர் 📂 பதிவு 26 பார்வைகள்
வங்காளதேசத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனித்துவமான சிகை அலங்காரத்தை வியக்கத்தக்க வகையில் ஒத்த
டிரம்பின் சிகை அலங்காரம் கொண்ட எருமை மாடு விலங்குகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது

வங்காளதேசத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனித்துவமான சிகை அலங்காரத்தை வியக்கத்தக்க வகையில் ஒத்த முடிகளைக் கொண்ட ஒரு அல்பினோ எருமை , கொல்லப்படுவதிலிருந்து தப்பித்து, உள்ளூர் விலங்குகள் சரணாலயதட ஒன்றில் பார்வையாளர்களின் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது.
டாக்காவில் உள்ள மிர்ப்பூர் தேசிய மிருகக்காட்சிசாலையில், டொனால்ட் டிரம்ப் என்று அழைக்கப்படும் 700 கிலோகிராம் (1,550 பவுண்டு) எடையுள்ள மாட்டை அதன் புதிய இல்லத்தில் காண்பதற்காகப் பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அந்த எருமை ஆரம்பத்தில் ஈத் பண்டிகையின்போது பலியிடப்படவிருந்ததாகவும், ஆனால் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து கடைசி நிமிடத்தில் அது காப்பாற்றப்பட்டதாகவும் பங்களாதேஷ் செய்தித்தாளான ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு அந்த எருமையைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அதனை விட்டுவிடவும், உள்ளூர் வாங்குபவருக்குப் பணத்தைத் திருப்பித் தரவும் உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது உத்தரவிட்டார்.
பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அசாதாரணமான பொது ஆர்வம் காரணமாக, கடைசி நேரத்தில் எருமையைப் பலியிடுவதிலிருந்து காப்பாற்ற முடிவு எடுக்கப்பட்டது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டாக்காவிற்கு வெளியே உள்ள நாராயண்கஞ்ச் என்னுமிடத்தில் ஒரு உள்ளூர் பண்ணையில் வளர்க்கப்பட்ட அந்த எருமை, தனது புதிய இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டதிலிருந்து, ஆர்வமுள்ள பார்வையாளர்களின் தொடர்ச்சியான வருகையை ஈர்த்து வருகிறது.
நான் டொனால்ட் டிரம்பைப் பார்ப்பதற்காகவே மிருகக்காட்சிசாலைக்கு வந்தேன் என்று 10 வயது சைஃபுல் இஸ்லாம் உணர்ச்சிபொங்கக் கூறியதாக ‘ தி டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net