செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில் இருந்து எந்தவொரு தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், குறித்த ஆய்வு விண்கலம் நிரந்தரமாகச் செயலிழந்துள்ளது என்று நாசா சற்று முன்னர் அறிவித்துப் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. காரணம் கடைசியாக இந்த ஆய்வு விண்கலம், 3I/ATLAS என்ற ஒரு அன்னிய விண்கல்லை ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்துள்ளது.
எமது பால்வெளி நட்சத்திரக் கூட்டத்திற்கு அப்பால், வேறு தொலைவில் இருந்து ஒரு விண்கல் எமது சூரிய குடும்பம் நோக்கி வருகிறது. இந்த விண்கல் தொடர்பாகவே நாசாவின் விண்கலம் ஆராய்ந்து வந்தது. சில புகைப்படங்களை அது அனுப்பியது. ஆனால் தொடர்ந்து அந்த மர்மமான விண்கல்லை ஆராய்ந்து வந்த நிலையில் ஏன் திடீரெனச் செயலிழந்தது என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக எந்தவொரு கோளாறும் இன்றி இயங்கி வந்த அந்த ஆய்வு விண்கலம், ஒரு குறிப்பிட்ட மற்றும் மர்மமான ஒரு விண்கல் தொடர்பாக ஆராயும் வேளை மட்டும் செயலிழக்க, என்ன காரணம்? இது தற்செயலாக நடக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. சமீபகாலமாக பூமியில் மற்றும் எமது சூரிய மண்டலத்தினுள் அடிக்கடி ஏலியன்கள் வந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எமது பூமி பெரும் ஆபத்தில் இருப்பதாகச் சீனா நேற்று முன்தினம் (02) ஒரு பரபரப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் அமெரிக்கா தான் ஏலியன்கள் தொடர்பாகப் பேசி வந்தார்கள். சில ஆதாரங்களை வெளியிட்டார்கள். ஆனால் சீனா எந்தவொரு அறிவிப்பையும் விடுத்ததே இல்லை. இருப்பினும் சீனா தற்போது இந்த அறிவித்தலை விட என்ன காரணம் என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் தான் சீனா இப்படி ஒரு அறிவித்தலை விட்டுள்ளது.
யார் கண்டது? திடீரென ஒரு விண்கல் பூமியில் மோதக்கூடும். அதில் இருந்து திடீரென வெளியாகும் ஒருவகையான உயிரினம் மனிதர்களை அழித்துப் பூமியைத் தாம் கைப்பற்றப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. பூமி உருவாகிய பின்னர், விண்கற்கள் பூமியில் மோதி, வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த அணுக்களால் தான் பூமியில் உயிரினமே தோன்றியது என்பது விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை. பூமியில் உள்ள தண்ணீர் கூட, ஒரு வேற்றுக்கிரக வேதியல் பொருள் தான். இதனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்! நாம் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தங்க நகைகளை மக்கள் வாங்கி அணிகிறார்கள். ஆனால் எத்தனை பேருக்குத் தெரியும் தங்கம் இந்த பூமியில் உருவாகிய ஒரு உலோகமே இல்லை. அதுவும் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு உலோகத் தாது தான்.