← முகப்பு பதிவு

ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்

🕐 19 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 14 பார்வைகள்
ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்
முதலில் கோத்தாவா? யோசிதாவா?

ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ கைதாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு திட்டமிட்ட சதி என்றும் தன்மீதான குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, யோசித தாக்கல் செய்த வழக்கின் தீரிப்பு வெளியாகவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது. அதற்கான தீர்ப்பு ஜூலை 3-ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மகிந்த குடும்பத்தை சேர்ந்தவரும் தனது பேர்த்தியாருமான டெய்சி என்ற பெண்ணுடன் இணைந்து நிதி மோசடி குற்றத்தைப் புரிந்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பஸில் ராஜபக்சவிற்கு பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தபாயவும் கைது அச்சத்தில் முன்தடை கோரியுள்ளார்.

மறுபுறம் மகிந்தவின் மனைவி மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களின் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு
13 நிமிடங்கள் முன்னர்
பதிவு
ஆங்கிலக் கால்வாயில் பிரிட்டிஷ் படகு மீது போர்க்கப்பல் எச்சரிக்கைக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ரஷ்யா உறுத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
அதிபர் விளாடிமிர் புடினை நையாண்டி செய்வதற்காக அறியப்பட்ட ரஷ்யக் கலைஞர் ஒருவர் போலந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார
9 மணி நேரம் முன்னர்
பதிவு
கொழும்பில் அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளும் படலம் சூடுபிடித்துள்ள நிலையில் கைது அச்சத்தில் பலரும் முன்னாயத்தங்க
20 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி
21 மணி நேரம் முன்னர்
பதிவு
வியட்நாமில் நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்பது சட்டப்பூர்வமானது. அங்கு பல உணவகங்கள் அந்த இறைச்சியை
23 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net