← முகப்பு செய்திகள்

யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய
யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி! ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு

யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(10.05.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம் பெற்ற நிலையில் அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் விசாரணைகளிடம் பெற்று வருகிறது.

அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டி இடைக்கால தடையையும் விதித்தது.

அதன் பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதாக ஆணைகுழுக்கு வழங்கிய உறுதிப்பாட்டினை அடுத்து இடைக்கால தடை நீக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகிறது.

மக்கள் தெளிவாக ஒன்றை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது யாழ்ப்பாணத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தினுடைய கல்வியையும் சிதைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற முயற்சிக்கு ஆளுநரும் உடந்தையாக இருக்கிறது கவலை தருகிறது.

ஆகவே இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை விரைவில் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net