← முகப்பு பதிவு

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் ,

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 32 பார்வைகள்
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் ,
வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் – கஜேந்திரகுமார் காட்டம்

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது

அதில் இராணுவ தரப்பினர் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமையே கூட்டம் நிறைவடைந்துள்ளது

மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு முடிவினையும் சாதகமாக எடுக்காமல் , காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் பல சமயங்களில் திட்டவட்டமாக நிராகரித்தும் , சில விடயங்களில் பரிசீலிப்போம் என தட்டிக்கழிக்கும் பதிலையும் கூறியுள்ளனர் . மக்கள் எதிர்ப்பார்க்கும் எந்தவொரு விடயமும் சாதகமாக முடிவெடுக்கப்படவில்லை

ஆனால் மூடிய அறைக்குள் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் , கடற்தொழில் அமைச்சர் வெளியே வந்து ஊடகங்களுக்கு முன்னால், சாதகமான பல விடயங்கள் நடைபெற்றுள்ளதாகவும் , விரைவில் தீர்வுகள் காணப்படும் என அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்

இந்த பொய்யை மக்கள் மட்டத்தில் விதைக்க தான் தமது கட்சி சாராத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை. அதேபோல வலி. வடக்கு பகுதி தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரை அழைத்து இருக்க வேண்டும். அவர்களையும் அழைக்கவில்லை

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அழைக்காது மூடிய அறைக்குள் மக்கள் பக்கம் இருந்து பேச கூடிய விடயங்களை பேசாது வெளியே வந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பொய்யை சொன்னது கண்டிக்கப்பட கூடிய விடயம் என மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net