← முகப்பு செய்திகள்

யார் அறுதி பெரும்பான்மை பெறுவர்?

🕐 04 May 2026 📂 செய்திகள் 158 பார்வைகள்
யார் அறுதி பெரும்பான்மை பெறுவர்?

தமிழக தேர்தல் முடிவுகளில் முன்னணி நிலவரம் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 118 என்ற எண்ணிக்கையை எந்த கூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற இந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக பதிவாகி இருக்கும் 12 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதே இதற்கான காரணம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டி பல அரசியல் பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட திரை நட்சத்திரமான விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம்.. எட்டு சதவீத வாக்குகளை பெற்று திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கான எண்ணிக்கையை எட்ட விடவில்லை. அந்தத் தேர்தலில் திமுக 96 இடங்களிலும், அதிமுக 61 இடங்களிலும் வெற்றி பெற்றது. இருப்பினும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால்.. காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதேபோன்று ஒரு நிலை தற்போதும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது தொடர்பாக காலை 11 மணி அளவில் தமிழக தேர்தல் முடிவுகளில் அரசியல் கட்சிகளின் முன்னணி நிலவரம் வெளியான பின்னர் உறுதிப்பட தெரியவரும் என்பதாலும்.. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 20க்கும் மேற்பட்ட சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால்.. இதில் 15 சுற்றுகளுக்கு மேல் முன்னணி நிலவரம் உறுதிப்பட தெரியவரும் என்றும் கள நிபுணர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள். ஆனாலும் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்பட்டிருப்பதால்.. இறுதி சுற்று வாக்குகளின் எண்ணிக்கைக்கு பிறகு தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 118 எனும் மாய எண்ணிக்கை குறித்த முடிவுகள் உறுதிபட தெரியவரும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net