மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் ஹிதோகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிதோகம பொலிஸ் பிரிவின் பஹலவெவ யோத எல பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அநுராதபுரம் ஹிதோகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் ஆவார்.
யோத எல நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்தப் பாதசாரி அநுராதபுரம் நெலு பேவா வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.