← முகப்பு செய்திகள்

பிரிட்டனின் 3 ஆண்டுகள் 700 ஆண்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பல

🕐 06 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
பிரிட்டனின் 3 ஆண்டுகள் 700 ஆண்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பல

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுயேச்சை எம்.பி ரூபர்ட் லோ “கூட்டு பாலியல் வன்கொடுமை அறிக்கை” என்ற ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையானது பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்ற கும்பல் அங்கிருந்த இளம் பெண்களை மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பாக முழு விவவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அவர் வாசிக்க வாசிக்க, ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அதிர்ச்சியில் உறைந்துபோனது என்றே சொல்லவேண்டும்.

அந்த அறிக்கையில், தான் சுமார் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், விலங்குகளை வைத்தும் அவர்கள் தன்னை வன்கொடுமை செய்தனர் என்றும் பெண் ஒரு கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் மட்டுமல்ல இன்னும் பல பெண்கள் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அதைவிட மிகக் கொடுமையானது என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்கள் சிக்கிச் சின்னாப்பின்னமாகி, வாழ்க்கையை வாழவே விரும்பாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான்.

இந்த நிலையில், நாட்டையே உலுக்கும் அளவிற்கு அந்நாட்டு பெண்களுக்கு கொடுமைகள் நடந்தும் எந்த நடவடிக்கையும் பிரிட்டன் அரசு ஏன் இன்னும் எடுக்கவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரிய குற்றங்கள் நடந்தும், இனப் பிரச்னை அல்லது மதப் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் தான் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்தக் குற்ற கும்பல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் சுயேச்சை எம்.பி ரூபர்ட் லோ கூறியுள்ளார்.

மேலும், இனம் மதம் என எதையும் காரணம் காட்டி குற்றவாளிகளுக்கு அரசே பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான நீதி வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாக பிரிட்டனை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் சுயேச்சை எம்.பி ரூபர்ட் லோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net