← முகப்பு பதிவு

முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 16 பார்வைகள்
முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத
கூட்டத்திற்குள் பயங்கரவாதி ?

முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்ததாகவும், அந்த கூட்டத்திற்குள் ஒரு பயங்கரவாதி ஊடுருவி மகிந்த ராஜபக்சவிற்கு ஏதேனும் தீங்கு விளைவித்திருக்கக்கூடிய சாத்தியம் இருந்ததாகவும் அவரது ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாதுகாப்பற்ற ஒரு சூழலிலேயே அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்று மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களின் மாவீரர் தினத்தை நினைவுகூரும் இவ்வாறானதொரு காலகட்டத்தில், சில குழுக்கள் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சி செய்யலாம் என்பதால் அரசாங்கம் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக பதிவாகிவரும் சந்தேகத்திற்கிடமான மரணங்களுக்கு மத்தியில், தனது சொந்த பாதுகாப்பு குறித்தும் அச்சநிலை தோன்றியுள்ளதாக மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net