← முகப்பு செய்திகள்

மாபலகம பகுதியில் பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் பாடசாலை பஸ் மோதி விபத்து!

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 64 பார்வைகள்
மாபலகம பகுதியில் பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் பாடசாலை பஸ் மோதி விபத்து!

மாபலகம – தல்கஸ்வல வீதியில் மாபலகம கயான் மலர்ச்சாலைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (7) பகல், பொதுப் போக்குவரத்து பஸ் ஒன்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று நண்பகல் வேளையில் இவ்விரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் காரணமாக இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net