பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிப்பு
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக, சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.