← முகப்பு பதிவு

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 22 பார்வைகள்
மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும்
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தரவே முடியாது – பெரமுனா திட்டவட்டம்

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

"மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு – கிழக்கில் தோல்வி உறுதியெனத் தெரிந்தும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தேர்தலை நடத்தினார்.

2017ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை ஊடாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போட மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஒத்துழைப்பு வழங்கின.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது நாட்டில் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். எனவே, இவ்விரு அதிகாரங்களைத் தவிர்த்து ஏனையவற்றைச் சகல மாகாணங்களுக்கும் பகிர்வதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

தேர்தல் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழு, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

மாகாண சபைத் தேர்தலின் ஊடாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு என்றும் சாகர காரியவசம் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
7 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net