← முகப்பு செய்திகள்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி
சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை சுமார் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net