← முகப்பு தமிழ்

பேருந்து நிலைய துப்பரவு பணிக்கான ஒப்பந்தம் – 30 இலட்ச ரூபாய் லஞ்சம் கோரிய பிரதி முதல்வர் கைது

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 128 பார்வைகள்
பேருந்து நிலைய துப்பரவு பணிக்கான ஒப்பந்தம் – 30 இலட்ச ரூபாய் லஞ்சம் கோரிய பிரதி முதல்வர் கைது

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் பேருந்து நிலையத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் பொது மலசலக்கூடத்தைத் துப்புரவு செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக பிரதி மேயர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபா மற்றும் மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபா வீதம் கோரப்பட்டுள்ளதுடன், அதில் முதற்கட்டமான 30 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோதே பிரதி முதல்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதி முதல்வரை நாளைய தினம் சனிக்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான இவர், பின்னர் சபையில் ஆட்சியமைப்பதற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதையடுத்து பிரதி முதல்வராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net