← முகப்பு செய்திகள்

பேரம் பேசுவதற்கு சாதகமான ஒரு வலுவான நிலையில் நாம் இருக்கும் இந்த தற்போதைய தருணத்திலேயே பேச்சுவார்த்தைகளை

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
பேரம் பேசுவதற்கு சாதகமான ஒரு வலுவான நிலையில் நாம் இருக்கும் இந்த தற்போதைய தருணத்திலேயே பேச்சுவார்த்தைகளை
IMF இலக்கை அடைய சரியான பாதையில் இல்லை: சஜித் எச்சரிக்கை

பேரம் பேசுவதற்கு சாதகமான ஒரு வலுவான நிலையில் நாம் இருக்கும் இந்த தற்போதைய தருணத்திலேயே பேச்சுவார்த்தைகளை நடத்துங்கள். இலங்கை தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பைத் தன்வசம் கொண்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நமது தற்போதைய திட்டம் 2027 மார்ச் மாதத்தில் முடிவடையும்போது, சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்பார்க்கும் இலக்கு 14.2 பில்லியன் டொலர்கள் ஆகும். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு, எதிர்வரும் பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 600 மில்லியன் டொலர் வீதம் நாம் கையிருப்பைச் சேகரிக்க வேண்டியிருக்கும். நாம் அந்த இலக்கை அடைவதற்கான சரியான பாதையில் பயணிக்கவில்லை. அப்படியிருந்தும், 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அரசாங்கம் எதையும் கூறவில்லை.

“தொடர்ச்சியான அடுத்த சர்வதேச நாணய நிதியத் திட்டம் (Successor IMF Program) ஒன்றிற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு இன்றைய தினம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இது தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக அல்ல, மாறாக இந்தத் திட்டம் முடிந்ததும் செயல்படுத்தப்பட வேண்டிய அடுத்த தொடர்ச்சித் திட்டத்திற்காகவே ஆகும்.

நான் முன்வைக்கும் இந்த யோசனை நிதி ஒழுக்கத்திலிருந்து விலகுவதற்காக அல்ல; அதற்கு நேர்மாறானதாகும்.” இலங்கை எப்போதும் ஒரு வலுவான நிதி நிலையில் நீடிக்கப் போவதில்லை. கடந்த பன்னிரண்டு மாதங்களுக்குள், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சுமார் 14% வீழ்ச்சியடைந்துள்ளது.

2022 ஜூன் மாத நெருக்கடி நிலையின் போது உச்ச விலையாகக் காணப்பட்ட 470 ரூபாய் எல்லைக்கு நெருக்கமாக, இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 410 ரூபாயாக உள்ளது. (இது ஜனவரி மாதத்தில் நிலவிய 294 ரூபாய் என்ற மட்டத்திலிருந்து, வெறும் நான்கு மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது).

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் பிராந்திய பொருளாதாரத்தை மறுவடிவமைத்து வரும் வேளையில், நமக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 8.1 பில்லியன் டொலர் வெளிநாட்டு அனுப்பீடுகள் வளைகுடா நாடுகளின் தொடர்ச்சியான வேலைவாய்ப்புகளிலேயே பெரிதும் தங்கியுள்ளன. இவை தூரத்து ஆபத்துகள் அல்ல.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net