← முகப்பு செய்திகள்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்

🕐 17 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்
ஈரானை மீண்டும் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியதாகவும், வரும் ஜூன் 19 ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அமெரிக்கா-ஈரான் இடையேயான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இது இறுதி ஒப்பந்தம் அல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. அதன் ஷரத்துகள் எனக்கு பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். குண்டுகளை வீசுவோம். ஒப்பந்தப்படி சரியாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்தம் எனக்கு ஏற்றதாக இல்லை என்றாலோ, மீண்டும் தாக்குதல்களை தொடங்குவோம்” என்றார். அதே நேரத்தில், அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் வலுவானது என்றும் அவர் தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தின் முழு விவரம் யாருக்கும் தெரியாது. ஆனால் அது மிகவும் வலுவானது” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net