← முகப்பு செய்திகள்

பாண்டிராஜ் இயக்கிய “பரிமளா அண்ட் கோ” படத்தின் பதாகை வெளியீடு

🕐 04 May 2026 📂 செய்திகள் 134 பார்வைகள்
பாண்டிராஜ் இயக்கிய “பரிமளா அண்ட் கோ” படத்தின் பதாகை வெளியீடு

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய நகைச்சுவை படம் “பரிமளா அண்ட் கோ” படத்தின் முதல் பதாகை தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது பாணியில் இந்த முறை அதிர்ச்சி மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா அண்ட் கோ” உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஷ்கின், சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net