2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துவது இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகள் குறித்து தகவல்கள் அல்லது சாட்சியங்கள் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்தால், அவற்றை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.