கொட்டா வீதி புகையிரத கடவை மறுசீரமைப்புப் பணிகள் ஒத்திவைப்பு!
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையினால், கொட்டா வீதி புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படவிருந்த மறுசீரமைப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
களனிவெளி ரயில் மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த புகையிரத கடவையின் அவசர திருத்தப் பணிகள், நாளை சனிக்கிழமை (23) காலை 09.30 மணி முதல் நாளை மறுதினம் (24) காலை 07.30 மணி வரை முன்னெடுக்கப்படவிருந்தன.
தற்போது பெய்து வரும் கடும் மழை உள்ளிட்ட சீரற்ற வானிலை காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த மறுசீரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதிகள் மற்றும் விபரங்கள் குறித்து அறிவிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.