← முகப்பு செய்திகள்

தொண்டர்கள் ஏமாற்றம்: வெறிசோடிய பனையூர் தவெக அலுவலகம்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 60 பார்வைகள்
தொண்டர்கள் ஏமாற்றம்: வெறிசோடிய பனையூர் தவெக அலுவலகம்
வெறிசோடிய பனையூர் தவெக அலுவலகம்

சட்டசபை தேர்தலில், த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, எம்.எல்.ஏ.க்கள் 107 பேர் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால், ஆட்சி அமைக்க 118 தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி களின் ஆதரவை த.வெ.க. கேட்டது.

அந்த வகையில் தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவெகவிற்கு ஆதரவு கடிதம் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கடிதம் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகிது. அதுமட்டுமின்றி, ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் தவெகவிற்கு ஆதரவு அளித்து கடிதம் அளித்துவிட்டதால், விஜய் முதல்வராக பதவியேற்பார் என உறுதியாக சொல்லப்பட்டது.

இதை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு திரண்டு இருந்த அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். ஆனால் விசிக, ஐயூஎம்எல் ஆகிய இருகட்சிகளும தவெக ஆதரவு அளிக்கவில்லை என தெளிவுப்படுத்தினர். இதனால் இன்றைய தினம் விஜய் முதல்வராக பதவியேற்பு நடைபெறவில்லை.

நேற்றைய தினம் உற்சாக் கரை புரண்டு தவெக அலுவலகம், இன்றைய தினம் வெறிசோடி காணப்படுகிறது. தொண்டர்கள் யாரும் தவெக அலுவலகம் வராத காரணத்தால் களையிழந்து காணப்படுகிறது. விஜய் பதவியேற்பதில் ஏற்ப்பட்டுள்ள தாமத்தால் தவெகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தே இதே காரணம்.

மேலும் செய்திகள்
செய்திகள்
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின்
05 Jun 2026
செய்திகள்
அண்ணாமலையை அடுத்த ரஜினிகாந்த் மனைவி லதா புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில்
05 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால
தமிழ் · 05 Jun 2026
2
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சிய
தமிழ் · 05 Jun 2026
3
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற
4
அண்ணாமலையை அடுத்த ரஜினிகாந்த் மனைவி லதா புதிய இயக்கம் ஒன்றை தொடங
5
நாட்டின் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து சிவில் அமைப்புக
தமிழ் · 05 Jun 2026
6
(எம்.மனோசித்ரா)மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய
தமிழ் · 05 Jun 2026
7
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net