← முகப்பு பதிவு

தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 26 பார்வைகள்
தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்
எச்சரிக்கிறார் செல்வம்!

தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா போர் நிறுத்தப்பட்டு சுமூகமான சூழல் ஏற்பட்டால், அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தப் பார்க்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த வகையிலே இன்று பிரஜாசக்தி மூலமாக கிராம ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லாமல் தனித்து செயற்படுகின்றனர்.

அடுத்த வருடங்களில் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் மக்களின் ஆதரவு எந்தளவுக்கு இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், நிலக்கரி ஊழல் உட்பட பல்வேறு முறைகேடுகளால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. இத்தகைய நிலையில், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகளைத் தன் வசப்படுத்த முயற்சிக்கும். மாறாக அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவார்களே ஆனால் அவர்கள் நினைப்பது போல் பல மாகாண சபைகளை இழக்க நேரிடும்.

வடக்கு-கிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக மக்கள் விரும்பும் செயலினை மேற்கொள்ளவில்லையாயின், நாம் தேசியம் பேசி எதுவித பயனும் இல்லை. நாம் மக்களைக் காப்பாற்றுகிறோம் என்று நாம் உதட்டோரமே பேசுகின்றோம் என அர்த்தப்படும்.

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால், தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் சூழல் உருவாகும். குறிப்பாக அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக வரமாட்டார்கள் என்ற விரக்தியின் காரணமாக அரசிற்கு மக்கள் வாக்களிப்பார்கள். இதனால் தேசிய மக்கள் சக்தியானது மாகாண சபைகளை கைப்பற்றுகின்ற அபாய நிலையை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் தேசியம் பேசும் அனைத்துக் கட்சிகளும் அருகதையறற்வர்கள் என்ற நிலைக்கும், மக்கள் எங்களை புறக்கணித்துள்ளனர் என்ற நிலைக்கும் உட்படுவோம்.

அவ்வகையிலே எங்களது போராளிகள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தை நாங்கள் துச்சமாக மதித்திருக்கிறோம் என்றும் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற அபாய நிலைக்கு நாம் எப்போதும் செல்லக்கூடாது என்பது எனது கருத்தாகும்.

எனவே சுயநல செயல்பாடுகளை விட்டுவிட்டு, தேர்தல் ஒற்றுமையாக மட்டும் இல்லாமல், மக்களின் அனைத்து விடயங்களிலும் நாங்கள் ஒரு சக்தியாக மாற வேண்டும். இல்லையெனில், தேசியம் பேசும் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
7 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net