← முகப்பு பதிவு

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலை

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 14 பார்வைகள்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலை
தேசிய மக்கள் சக்தி :ஊடகவியலாளர் விசாரணைக்கு?

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபை தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரதேசசபை செயலாளர் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கும், அவர் சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதேசத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாக தெரிவித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் காவல்; நிலையத்தில் ஊடகவியலாளர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதற்கமைய, காவல்நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர்; தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 29ம் திகதியன்று காலை 10 மணிக்கு மீண்டும் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் தாமே தனது தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை வட்சப் குழுவில் பகிர்ந்த பின்னரே அது வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்திருப்பது ஊடக அடக்குமுறைக்கான விடயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 26 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net