← முகப்பு செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒ

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒ
வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net