← முகப்பு செய்திகள்

திருகோணமலையில் பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 60 பார்வைகள்
திருகோணமலையில் பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி

திருகோணமலையில் பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சியானது திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (8) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி சனிக்கிழமை (9) மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் பெண்களின் வாழ்வியல் தொடர்பான பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கான நீதி வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பிலும் உணர்வுபூர்வமாக இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்த கண்காட்சியில் பெண் சமூக சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net