← முகப்பு செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 82 பார்வைகள்
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

இந்தியாவின் அண்டை நாடான திபெத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 3.10 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 38 கி.மீட்டர் ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

பொதுவாக ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பை அடைய குறைந்த தூரமே பயணிக்கின்றன. இதன் விளைவாக, தரை அதிர்வு வலுவாக இருப்பதோடு, அதிக கட்டமைப்பு சேதங்களும், அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியில் உள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால
தமிழ் · 05 Jun 2026
2
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற
3
நாட்டின் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து சிவில் அமைப்புக
தமிழ் · 05 Jun 2026
4
(எம்.மனோசித்ரா)மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய
தமிழ் · 05 Jun 2026
5
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வ
6
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு
7
Numerology: சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறு வ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net