← முகப்பு செய்திகள்

தவெகவிற்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு – “முதுகில் குத்துவதாக” திமுக விமர்சனம்

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 90 பார்வைகள்
தவெகவிற்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு –  “முதுகில் குத்துவதாக” திமுக விமர்சனம்

பட மூலாதாரம், @TVKPartyHQ/X

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தவெகவிற்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளிப்பது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது பற்றிய சமீபத்திய செய்திகளை இந்த பக்கத்தில் காணலாம்.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியாக அறிக்கையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக கிரிஷ் சோடங்கர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்திருப்பதாகவும் பனையூர் சென்று நேரில் அதை தெரிவிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கவர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

திமுக கூறுவது என்ன?

காங்கிரஸ் நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளி என திமுக விமர்சித்துள்ளது.

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதனை முதுகில் குத்துவது என நாங்கள் கூறுகிறோம். வெற்றிச் சான்றிதழ் வருவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி அணி மாற முடிவெடுத்துள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் திருப்திகரமானதாக இல்லை."

"பாஜகவை வெளியில் வைக்க தான் இந்த முடிவெடுப்பதாக கூறுகிறார்கள். விஜய் எப்போதுமே பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு எதிராகப் பேசியதில்லை. தவெக வெற்றி பெற்ற உடன் வாக்காளர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்காமல் நேரடியாக முதலில் பிரதமர் மோதிக்கு தான் விஜய் நன்றி தெரிவித்திருந்தார். விஜயின் முக்கியத்துவம் என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்."

"பாஜக தோற்கடிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவசர கதியில் காங்கிரஸ் எடுக்கும் இந்த முடிவின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும். கூட்டணியில் மற்றவர்களும் இருக்கிறார்கள்."

"காங்கிரஸ் இவ்வாறு நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளியாக இருந்தால் மற்ற தலைவர்களின் எண்ணத்தில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? தவெகவிற்கு எதிராக போட்டியிட்டார்கள், தற்போது அவர்களுடன் சேர்கிறார்கள். காங்கிரஸை நம்ப முடியாது என்கிற நிலையை தான் இது உருவாக்கும். காங்கிரஸ் தலைமை ஏன் இதை அறிவிக்கவில்லை. இந்த முடிவை ஏன் மாநில தலைமையிடம் கொடுத்துவிட்டார்கள். நாளை ஏதாவது தவறாகச் சென்றால் அதிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவே இந்த முடிவு." எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் தவெகவிடமிருந்து ஆதரவு கோரி கடிதம் வந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "முற்போக்கு அரசை அமைக்க விரும்புகிறோம், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் அந்தக் கடிதத்தை பெற்றுக் கொண்டோம்." என்றும் அவர் கூறினார்.

தவெக, விஜய், சிபிஐ

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "எங்களுக்கு வருகிற அமைச்சரவை வாய்ப்புகளை நாங்கள் நிராகரிக்கவில்லை. அந்த வாய்ப்புகளைவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். கூட்டணி ஆட்சி தொடர்பாக எங்களுக்கு எதிர்மறை கருத்து இல்லை. ஜனநாயகத்தில் அதிகாரப் பரவலாக்கம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் அது கொள்கை அடிப்படையில், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கான சூழல் இன்னும் எழவில்லை. அப்படி எழுந்தால் குறைந்தபட்ச செயல்திட்டம் முக்கியம்." என்றார்.

செயல்குழுவில் ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறும் வீரபாண்டியன், "விஜய் ஆதரவு கேட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் பரிசீலிக்கும். எங்களின் முடிவைத் தெரிவிப்போம். மக்கள் ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். பெரும்பான்மை இடங்கள் தவெகவிற்குச் சென்றுள்ளது. இதை நாங்கள் அங்கீகரித்து ஏற்கிறோம். நாளை மறுநாள் நடைபெறக் கூடிய செயற்குழுவில் ஆலோசித்து தான் ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்போம்." என்றும் தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
French Open 2026: Poland's Maja Chwalinska became the first qualifier in French
05 Jun 2026
செய்திகள்
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?
52 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏ
54 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
8 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
French Open 2026: Poland's Maja Chwalinska became the first
2
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒர
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 05 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்
செய்திகள் · 52 நிமிடங்கள் முன்னர்
5
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்தி
செய்திகள் · 54 நிமிடங்கள் முன்னர்
6
தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு டெண்டர் முறைகேட
தலையங்கம் · 55 நிமிடங்கள் முன்னர்
7
லிங்க்ட்இன் (LinkedIn), இன்டீட் (Indeed) மற்றும் அப்வொர்க் (Upwor
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net