← முகப்பு செய்திகள்

தவெகவின் எம்.எல்.ஏக்கள் இராஜினாமா செய்கிறார்களா?

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
தவெகவின் எம்.எல்.ஏக்கள் இராஜினாமா செய்கிறார்களா?

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்தால் தவெகவின் 107 எம்.எல்.ஏக்களும் இராஜிநாமா செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைப் பெறாததால், ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், இத்தகைய செய்திகளுக்கு திமுக, அதிமுக தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திமுகவும் அதிமுகவும் தனித்தோ ஒன்றிணைந்தோ ஆட்சியமைத்தால், தவெகவின் எம்எல்ஏ-க்கள் அனைவரும் இராஜிநாமா செய்ய வேண்டும் என கட்சியினருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தவெகவினருக்கு யாரேனும் ரூ. 10 கோடி கொடுத்தாலும், கட்சித் தலைவர் விஜய்க்கு நேர்மையாக நடக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net