← முகப்பு செய்திகள்

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை
கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து ; இருவர் படுகாயம்

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாமஸ்டன் தோட்டத்திலிருந்து ரட்ணகிரி தோட்ட வீதியூடாக தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

எனினும் வியாழக்கிழமை (21) காலை சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான லொறி பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net