← முகப்பு செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
தமிழக சட்டசபை நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின்
தமிழ்நாடு சட்டசபை நாளை கூடுகிறது

தமிழக சட்டசபை நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது.

இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் மேலும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

நாளை மற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். தற்போது தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தமிழக சட்டசபை நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 13ஆம் திகதிக்குள் சட்டசபையில் தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net