← முகப்பு தலையங்கம்

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் களத்தில் ஏற்பட்ட

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 16 பார்வைகள்
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் களத்தில் ஏற்பட்ட
ஸ்கெச் போட்டு தூக்கும் தவெக: சேகர் பாபுவை சிறையில் அடைக்க பிளான் ரெடி !

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் களத்தில் ஏற்பட்ட மோதல், தற்போது ஆளுங்கட்சியின் மிக முக்கிய புள்ளியான முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர் பாபுவை குறிவைத்துத் நகரும் அதிரடி ஆட்டமாக மாறியுள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தேர்தல் நாளின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளரைத் தாக்கியதாகவும், வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும் எழுந்த புகாரில், சேகர் பாபு உள்ளிட்ட திமு கழகத்தினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது.

ஆளுங்கட்சியின் ‘பவர்ஃபுல்’ தலைவர்களில் ஒருவரான சேகர் பாபு மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு, சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. தவெக தலைவர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில், அக்கட்சியின் சட்டப் பிரிவு வழக்கறிஞர்கள் மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை நகர்த்த முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் சென்னை காவல்துறை இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கைது நடவடிக்கை பாயலாம் என்ற உளவுத்துறை ரிப்போர்ட், அறிவாலயத் தரப்பை நிலைகுலையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“ஆட்டம் ஆரம்பம்” என்று தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், சேகர் பாபுவை சிறைக்குள் தள்ளுவதற்கான அனைத்து ‘ஸ்கெட்ச்’களும் கச்சிதமாகப் போடப்பட்டு விட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக வேட்பாளருக்கு வந்த கொலை மிரட்டல் மற்றும் வாக்குச்சாவடி வன்முறை தொடர்பான ஆதாரங்களை, ஆளுநரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பித்து, சட்டரீதியான உச்சகட்ட அழுத்தத்தை தவெக தரப்பு கொடுத்து வருகிறது. சென்னை திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரையே வளைக்க நடக்கும் இந்தச் சதித்திட்டம் ஆளுங்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், இந்த விவகாரத்தை எதிர்கொள்ள திமுக தரப்பும் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், தவெக தரப்போ எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, ஆளுங்கட்சியின் முக்கிய விக்கெட்டைச் சரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக அரசியலுக்கும் தங்களின் பலத்தைக் காட்ட தவெக வியூகம் வகுத்துள்ளது. இதனால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘வெடி’ வெடிக்கக் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி!

மேலும் செய்திகள்
தலையங்கம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்
08 Jun 2026
தலையங்கம்
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணமாக, இன்று (8) முதல் பேருந்து சேவைகளைக்
08 Jun 2026
தலையங்கம்
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர்
08 Jun 2026
தலையங்கம்
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய
08 Jun 2026
தலையங்கம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அண்மையில் அடுத்தடுத்து அரங்கேறிய சாதிய வன்முறைத் தாக்குதல்கள் தமிழக அளவி
29 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான புதிய
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net