← முகப்பு தமிழ்

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 48 பார்வைகள்

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில்

மேற்கோள் –

"கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தன்சல் வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தியானது முற்றுமுழுதாகப் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்.

அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை என்பதோடு, இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் இன, மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடனேயே சில தரப்பினரால் இவ்வாறான போலியான செய்திகள் திட்டமிட்டுப் புனையப்பட்டுப் பரப்பப்படுகின்றன.

இவ்வாறான கீழ்த்தரமான மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு எதிராக, ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான அடிப்படையற்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், போலிப் பரப்புரைகளுக்கு ஏமாறாமல் இன, மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் தொடர்ந்து பேணுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்."

மேற்கோள் நிறைவு

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net