← முகப்பு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்
தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்தல் : பொதுமக்களின் முன்மொழிவுகளைப் பெற தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மீளாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net