← முகப்பு தமிழ்

செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்?

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 12 பார்வைகள்
செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்?

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் "கலி பவுசர்" மூலம் வெள்ள நீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

அகழ்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், செம்மணி பகுதியில் திடீரென மதியம் மழை பொழிந்தமையால் , அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டன. அத்துடன் புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீரும் தேங்க தொடங்கியது.

அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையின் கலி பவுசர்களை அழைத்து , அவற்றின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டன

இந்நிலையில் இன்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் இரண்டு என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 260 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 256 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை 12ஆம் நாள் அகழ்வு பணிகள் அரை நாட்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு இடையில் மழை குறுக்கிட்டால் , நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகளை தாற்காலிகமாக இடைநிறுத்தி , ஓரிரு கிழமைகளில் பின்னர் நீதிமன்று குறிப்பிடும் நாளொன்றில் மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net