← முகப்பு செய்திகள்

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை

சீனாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்ஹே. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். இவரை தொடர்ந்து, லி ஷாங்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதனிடையே, இவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து இருவரையும் நீக்கம் செய்து சீன அதிபர் ஜின்பிங் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வெய் பெங்ஹே மற்றும் லி ஷாங்பு மீதான ஊழல் புகார்கள் குறித்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கும் மரண தண்டனை விதித்து சீன நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால
தமிழ் · 05 Jun 2026
2
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற
3
நாட்டின் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து சிவில் அமைப்புக
தமிழ் · 05 Jun 2026
4
(எம்.மனோசித்ரா)மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய
தமிழ் · 05 Jun 2026
5
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வ
6
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு
7
Numerology: சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறு வ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net