← முகப்பு செய்திகள்

சஜித் பிரேமதாசவின் பிம்பத்தையும் அவரது எதிர்காலத்தையும் சிதைக்க சதி நடக்கிறது. அந்தச் சதியை முறியடிக்கவேண்டும்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
சஜித் பிரேமதாசவின் பிம்பத்தையும் அவரது எதிர்காலத்தையும் சிதைக்க சதி நடக்கிறது. அந்தச் சதியை முறியடிக்கவேண்டும்
சஜித்தின் பிம்பத்தையும் அவரது எதிர்காலத்தையும் சிதைக்க சதி – உபுல் திஸாநாயக்கா

சஜித் பிரேமதாசவின் பிம்பத்தையும் அவரது எதிர்காலத்தையும் சிதைக்க சதி நடக்கிறது. அந்தச் சதியை முறியடிக்கவேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், கலகெதர தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளருமான பேராசிரியர் உபுல் திஸாநாயக்கா தெரிவித்தார்.

கண்டி டெவன் ஹோட்டலில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்-,

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியன ஒரே மேடைக்கு வந்து, மக்கள் முன்னிலையில் தமது ஒற்றுமையை அறிவிக்கவேண்டும். அவ்வாறில்லாத எந்தவொரு இணைப்பினாலும் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் நாட்டுக்கும் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு கட்சித் தலைவர்களும் இணைந்து வழங்கும் செய்தி, பிரிந்து கிடக்கும் இந்த பாரிய அரசியல் முகாமை எளிதில் ஒன்றிணைக்கும். இந்த ஒற்றுமை நாட்டின் அடுத்த பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த உதவும். இந்த இணைப்புக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இரு தரப்பினதும் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில், பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும். உலக அரசியலில் இதற்குப் பல முன்மாதிரிகள் உள்ளன என்றார்.

செய்தி சேவை

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது -சஜித் பிரேமதாச ஒரு பலவீனமான தலைவர் என்ற பிம்பத்தை சமூகத்தில் உருவாக்கச் சதி நடப்பதாகக் கூறினார்.

இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். எமது தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது எமக்குள்ள பெரிய பலம்.

அரசாங்கத்தின் மீது தற்போதுள்ள அதிருப்தி மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு வழங்கிய வாக்குறுதிகள் போன்ற காரணங்களால் இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் சாத்தியம் இல்லை எனக் கூறலாம். எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் கருத்தை அறியும் நோக்கில் மட்டும் இத்தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மல்வானையில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான வீட்டைத் தம் வசம் வைத்திருப்பது குறித்துக் கேட்டபோது, அது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என அவர் பதிலளித்தார்.

இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்றும், இவ்வாறான சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நிகழும்போது சட்டம் உடனடியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net