← முகப்பு செய்திகள்

சங்கீத கலாநிதி சாருகேசி குடும்பத்தில் உருவாகும் மோதல்களும், உறவுகளுக்கிடையேயான உணர்வுப் போராட்டங்களும்தான் படத

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
சங்கீத கலாநிதி சாருகேசி குடும்பத்தில் உருவாகும் மோதல்களும், உறவுகளுக்கிடையேயான உணர்வுப் போராட்டங்களும்தான் படத
charukesi family conflict review

சங்கீத கலாநிதி சாருகேசி குடும்பத்தில் நிகழும் குழப்பங்கள்தான் கதை. கொஞ்சம் விசத்தனம், மீதி கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் என சுரேஷ் கிருஷ்ணா தன் ஆதர்சன இயக்குநர்களின் தனித்துவத்தை எல்லாம் ஒரே படத்தில் தன் வசமாக்க முயற்சி செய்திருக்கிறார். இயக்குநர் சங்கீத ஜாம்பவான் சாருகேசி யாசு வரும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு எதிரிகள் வெளியில் இல்லை வீட்டில் தான் அதுவும் சொந்த மகனான ராஜ் ஐயப்பாவும் மருமகள் ரம்யா பாண்டியனும்தான்.

இந்தக் குடும்ப யுத்தத்தில் டிரைவர் தலைவாசல் விஜய் ஒய்.ஜி.எம். பக்கம் நிற்க, சாருகேசியின் மனைவி சுஹாசினி நடுநிலையாக நின்று அந்தக் குடும்பத்தில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மீட்டெடுக்கப் போராடுகிறார். காட்சிகள் 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்துபைரவி' படங் களை நினைவுபடுத்தினாலும், பா.விஜய்யின் வசனமும், சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கமும் பளிச் செனத் தனித்துத் தெரிகின்றன. பாராட்டுக்குரியவர் தேனிசைத் தென்றல் தேவா. இளம் இசையமைப் பாளர்களுக்குப் பின்னணி இசை எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு அருமை தனித்துத் தெரியும் மற்றொரு முகம் ராகதேவனாக வரும் சத்யராஜ், ஜீசஸ் தோற்றத்தில் சிவபெருமானின் சாராம்சமாக வரும் அவரின் வசனங்கள்தான் படத்தின் ஆன்மா.

சமுத்திரக்கனி, மதுவந்தி சிறப்பு! கிளைமாக்ஸ் பாடல் சூப்பர். சுச்சேரிக் காட்சிகள் காமெடியாகவும், காவல் நிலையக் காட்சி செயற்கையாகவும் இருப் பதைத் தவிர்த்திருக்கலாம். மகன் கொடூரமாக வெறுக்கும் அளவிற்கு அப்பா என்ன செய்தார் என்பதற்குப் படத்தில் ஒரு காட்சி கூட இல்லாதது சறுக்கல்!

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net