← முகப்பு செய்திகள்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலமொன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 56 பார்வைகள்
கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலமொன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இனந்தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலமொன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் உயிரிழந்தபோது கருப்பு நிற அரைக் காற்சட்டை மற்றும் பழுப்பு நிற டீ ஷர்ட்டும் அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 5 அடி 6 அங்குல உயரமானவர் எனவும் குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடி வைத்துள்ளவர் எனவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net