← முகப்பு செய்திகள்

கொழும்பு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதற்கா

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
கொழும்பு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதற்கா
‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயக் கொண்டாட்டம்: நள்ளிரவு 12.30 வரை மாத்திரம் அனுமதி

கொழும்பு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதற்கான எரிசக்தி பயன்பாடு குறித்த இறுதிச் கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (20) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெசாக் வலயத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டுக்கான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.

இம்முறை வெசாக் வலயம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிகாரி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:

குறைந்த எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுகளுடன், ஆன்மீக வழிபாடுகளுக்கு இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும். அதேநேரம், பக்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் வெசாக் கூடுகள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்கள் மூலமாக வெசாக் வலயத்தை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த இறுதிச் சந்திப்பில் கங்காராம விகாராதிகாரி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர், முப்படைகளின் தளபதிகள், ஸ்ரீலங்கா பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், எரிசக்தி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net