← முகப்பு செய்திகள்

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேலதிக நிதியிலிருந்து 2013ஆம் ஆண்டு கட்டடப் பொருட்கள் ஊடாக கூட்டுத்தாபன

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 40 பார்வைகள்
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேலதிக நிதியிலிருந்து 2013ஆம் ஆண்டு கட்டடப் பொருட்கள் ஊடாக கூட்டுத்தாபன
2013க்கான கடன்தொகையை மீள அறவிடாததால் கூட்டுத்தாபனத்துக்கு 167 மில்லியன் ரூபா நட்டம்

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேலதிக நிதியிலிருந்து 2013ஆம் ஆண்டு கட்டடப் பொருட்கள் ஊடாக கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகையை மீளச் செலுத்தத் தவறியதன் காரணமாக, சுமார் 167 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. கூட்டுத்தாபனம் நட்டமடைந்ததால் 2015க்குப் பிறகு கடன் மீளச் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையிலான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அவர் சமுகமளிக்க முடியாது என அறிவித்திருந்ததால், பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் கூடியது.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு, 2021–2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையும், 2024 ஆம்ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையும் மற்றும் தற்போதைய செயல்திறனும் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது, 2021 ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேலதிக நிதியிலிருந்து 2013ஆம் ஆண்டு கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகையை மீளச் செலுத்தத் தவறியதன் காரணமாக, சுமார் 167 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குழு சுட்டிக்காட்டியது.

கூட்டுறவு விதிகளை மீறி இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு தெரியவந்தது.

இக்கூட்டுத்தாபனம் நட்டமடைந்ததால் 2015க்குப் பிறகு கடன் மீளச் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக 28 கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 31 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை, 12 முதல் 59 வருடங்களாக அறவிடப்படாமல் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியது.

இதில் 22 சங்கங்கள் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நேரடித் தலையீடு செய்ய முடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, புதிய கூட்டுறவுச் சட்டத்தை விரைவாகத் தயாரித்து, இத்தொகைகளை அறவிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு குழு பரிந்துரைத்தது.

நாட்டில் நிலவிய முட்டைத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக 2024இல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த, ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளை தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கும் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டம் மாவட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தப்படாமல், கம்பஹா மாவட்டத்தின் 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net