← முகப்பு தமிழ்

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர்

🕐 11 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுக்கு மேலதிகமாக, இரண்டு குவைத் நாட்டவர்கள், ஓர் இந்தியர் மற்றும் மேலும் இரு வெளிநாட்டவர்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஹஷிஷ் (Hashish), ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களை அளவிடும் கருவிகள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குவைத் நாட்டின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
(செ.கவிஷனா)கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவத
9 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
(செ.கவிஷனா)ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக சபை முன்னெடுத்து வரும் தன்னிச்சையான தீர்மானங்கள்
34 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
வயிற்றுக்குள் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த
13 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில்
14 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா
15 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net