← முகப்பு தமிழ்

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார்

🕐 10 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

உர இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக உர நிறுவனங்களின் தயார் நிலை குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார். பெரும் போகத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி உரிய முறையில் உரங்களை வழங்குவதற்காக, உர இறக்குமதி மற்றும் விநியோக செயல்முறைகளை கால அட்டவணையின்படி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பெரும் போகம் ஆரம்பமாகும் போது, விவசாயிகளுக்கு உரிய முறையில் உரங்களை விநியோகித்தல் மற்றும் உர இறக்குமதியின் போது உலக சந்தையில் உர விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, உர இறக்குமதி செய்வதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், ஜூலை மாத ஆரம்பத்தில் அதன் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் இங்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் ஜானகி அமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச உர நிறுவனத்தின் தலைவர் பி. சி. டபிள்யூ. சேதுகே, CIC விவசாய உற்பத்தி தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜீவ விஜயவீர, நியூ லங்கா கொமர்ஷல் உர நிறுவனத்தின் பணிப்பாளர் ஈ.கே. சிசிர குமார, ஹேலீஸ் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமுத்ர ராஜபக்ஷ, எலைட் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் அபேசிங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
வயிற்றுக்குள் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில்
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா
3 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவ
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய
4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net