← முகப்பு செய்திகள்

கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 76 பார்வைகள்
கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று (7) இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்டு அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை மீட்டதுன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரை கைதுசெய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவரை இன்று (8) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net