← முகப்பு தலையங்கம்

கடும் மது போதையில் இருக்கும் ஒரு நபரால் மட்டுமே இப்படி எல்லாம் தரம் கெட்டு பேச

🕐 3 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 10 பார்வைகள்
கடும் மது போதையில் இருக்கும் ஒரு நபரால் மட்டுமே இப்படி எல்லாம் தரம் கெட்டு பேச
குடி போதையில் சீமான்: தலைவர் பிரபாகரனை அசிங்கப்படுத்தியது தான் மிச்சம் !

கடும் மது போதையில் இருக்கும் ஒரு நபரால் மட்டுமே இப்படி எல்லாம் தரம் கெட்டு பேச முடியும்.

மறைந்த தேனிசை செல்லப்பாவின் நினைவு நிகழ்வு சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒருபுறம் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்துப் பேசி மேடையில் கைத்தட்டல் வாங்கிக்கொண்டு, அதேநேரத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் ஒருமையில் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தவெக தொண்டர்களையும் அவமதித்துள்ளார்.

மேடைகளில் கைத்தட்டல் பெற வேண்டும் என்பதற்காகத் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்கள் குறித்துப் பேசுவதும், அடுத்த நொடியே முதலமைச்சர் மற்றும் தவெக கட்சி உறுப்பினர்களைக் கடுமையாகச் சாடுவதும் எனத் தனது அரசியலை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் சீமான் நகர்த்தி வருகிறார். அடிக்கடி மேடையில் தன்னைத் தலைவர் பிரபாகரன்தான் வளர்த்தார் என்று கூறும் சீமான் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை; ஒருபோதும் தலைவர் பிரபாகரன் அவர்கள் சக மனிதர்களைப் பார்த்து இப்படித் தரக்குறைவாகப் பேசமாட்டார் என்பதுதான் அது. தலைவரால் வளர்க்கப்பட்டதாகச் சொல்லும் சீமான், தனது இந்தச் செயல்பாடுகளுக்காக உண்மையில் வெட்கப்பட வேண்டும்.

ஈழம் சென்று சில நிமிடங்கள் மட்டுமே தலைவர் பிரபாகரனைச் சந்தித்த சீமான், பின்னாளில் ஏதோ தலைவரே தன்னை வளர்த்தது போலப் படம் காட்டுவதும், ஆமைக்கறி சமைத்துத் தந்தார்கள் என்று கட்டுக்கதைகளைக் கூறுவதும் ஒரு மிகப்பெரிய பொய் பித்தலாட்டம் ஆகும். தமிழகத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்துவதையும், தனது அரசியல் எதிரிகளைத் தாக்க அதே உணர்சியைக் கையில் எடுப்பதையும் சுயமரியாதை உள்ள ஈழத் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இதுநாள் வரை வெறும் பேச்சளவில் மட்டுமே, திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் சீமான் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், தேனிசை செல்லப்பாவின் நினைவுத் தினத்தில் சீமான் பேசியது அனைத்தும் மறைமுகமாக திமுகவிற்குச் சாதகமாகவே அமைந்திருந்தது. இந்த மேடையில் “தம்பி” உதயநிதி என்று சீமான் நெகிழ்ந்து குறிப்பிட்டுப் பேசியது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் திமுக – சீமான் இடையேயான மறைமுகக் கூட்டணி தற்போது அம்பலமாகிவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து விசிக அல்லது கம்யூனிஸ்டுகள் பிரிந்ததைக்கூட திமுக பொறுத்துக் கொண்டது, ஆனால் காங்கிரஸ் பிரிந்து சென்றதைத்தான் திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தச் சூழலை அப்படியே புரிந்து கொண்டு, திமுகவிற்கு வக்காலத்து வாங்குவது போலப் பேசியிருக்கிறார் சீமான். காங்கிரஸ் கட்சியை அவர் மேடையில் சாடியது எல்லாமே, அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற வைராக்கியத்தை வைத்துத்தான் என்பது தெளிவாகிறது. தங்களால் நேரடியாகப் பேச முடியாத சில விஷயங்களை அல்லது படு கேவலமான அரசியல் விமர்சனங்களை, திமுக தற்போது சீமானை முன்னிறுத்திப் பேச வைக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகப் புரிகிறது. சீமானுக்குப் பணத்தைக் கொடுத்தால் போதும், திமுக எழுதிக் கொடுத்ததை விட ஒருபடி மேலே போய்ப் பேசுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த தேர்தலில் 8% சதவீத வாக்குகளைப் பெற்ற சீமான், இம்முறை வெறும் 3.5% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுப் படுதோல்வியடைந்தார். இனிவரும் தேர்தல்களில் 1 அல்லது 2% சதவீத வாக்குகளை மட்டுமே சீமானால் பெற முடியும் என்ற சூழல் நிலவுவதால், இத்தோடு நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அழிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நேற்று முன்தினம் சீமான் பேசிய தரக்குறைவான பேச்சுகள், நாம் தமிழர் கட்சியில் உள்ள தீவிர இளைஞர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது என்று இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்
08 Jun 2026
தலையங்கம்
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணமாக, இன்று (8) முதல் பேருந்து சேவைகளைக்
08 Jun 2026
தலையங்கம்
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர்
08 Jun 2026
தலையங்கம்
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய
08 Jun 2026
தலையங்கம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அண்மையில் அடுத்தடுத்து அரங்கேறிய சாதிய வன்முறைத் தாக்குதல்கள் தமிழக அளவி
30 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான புதிய
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net