← முகப்பு செய்திகள்

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதிபன்

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 74 பார்வைகள்
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதிபன்

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் பிரதிபன் தெரிவித்தார்.

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இவ் மாவட்ட கண்காட்சி நிகழ்வானது நீண்ட காலத்துக்கு பின்னர் அதாவது 10 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவது மகிழ்ச்சியான விடயம் எனவும், பெண்கள் சர்வதேச ரீதியாக இன்றைய உலகில் சாதனை படைத்து வருகின்றார்கள் எனவும், அந்தவகையில் கிராமங்களிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக உயர வேண்டும் எனவும், அதற்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் பயிற்சி நெறிகள் மூலம் அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும், கிராமங்கள் அபிவிருத்தி அடைந்தால் மாவட்டம் அபிவிருத்தி அடையும் அதனைத் தொடர்ந்து மாகாணம் அபிவிருத்தி அடைந்து நாடு அபிவிருத்தி அடையும்.

எனவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது இன்றைய சமூகத்தில் பெண்கள் பிரதான பங்களிப்பினை ஆற்றி வருகின்றார்கள் எனவும், கல்வித் துறையிலும் சரி அரசு துறையிலும் சரி பெண்களின் பங்களிப்பு காத்திரமாக உள்ளது எனவும், கிராமத்தினையும் பெண்களின் பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் அப் பிரதேசம் அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு மனித வாழ்க்கையில் ஆடை வடிவமைப்பு, மனப் பொருளியல் மற்றும் அழகுக்கலை முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், மாறி வரும் உலகில் இதன் வடிவங்களோ வகைகளோ மாறினாலும் இம் மூன்றும் மாறாது எனவும், அந்தவகையில், கிராம அபிவிருத்தி திணைக்களம் ஒரு முதுகெலும்பாக செயற்பட்டு வருகின்றது என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net