← முகப்பு தலையங்கம்

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர்

🕐 11 Mar 2026 📂 தலையங்கம் 78 பார்வைகள்
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர்

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் உள்ள கெர்சர் நகரில் நேற்று மாலை ஒரு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மொத்தம் 11 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கெர்சர் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி பஸ் முழுவதையும் சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசரமாக பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர்.

இந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் பஸ்சில் இருந்த மற்ற 6 பயணிகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பஸ்சில் தீப்பற்றியதற்கான காரணம் என்ன? இதில் ஏதேனும் சதிச்செயல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,
04 Jun 2026
தலையங்கம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரான் மற்றும் குவைத் நாடுகளுக்கு
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net